பதிப்பு - 1
சச்சின வர்க்ரிக்கெ ட்டில்சாத னையாட்டம்
நச்சென ஆடுவாரா மேல்சபையி லாட்டம்
எடுப்பாரா கூட்டத்தில் மக்களவர் வாட்டம்
தடுப்பாட்டம் வேண்டா மது
பதிப்பு - 2
சச்சினவர் க்ரிக்கெட்டின் சாதனை யுச்சியில்
நச்சென ஆடுவாரா மேல்சபையி லாட்டம்
எடுப்பாரா கூட்டத்தில் மக்களவர் வாட்டம்
தடுப்பாட்டம் வேண்டா மது
பதிப்பு - 3
சச்சினவர் க்ரிக்கெட்டின் எட்டாத சாதனை
உச்சத்தில் சென்றாலும் கேட்பார்நல் போதனை
ஆட்டமுண்டு மேல்சபையின் கூட்டத் தினில்
வாட்டமது வேண்டாம் இனி
பதிப்பு - 4
சச்சின வர்க்ரிக்கெ ட்டில்சாத னையாட்டம்
நச்சென ஆடுவாரா மேல்சபையில் நல்லாட்டம்
வேண்டும் அடித்தாடும் வேங்கைபோல் துள்ளாட்டம்
வேண்டாம் தடுப்பாட் டமது
பதிப்பு - 5
சச்சினவர் க்ரிக்கெட்டின் சாதனை யுச்சியில்
நச்சென ஆடுவாரா மேல்சபையில் நல்லாட்டம்
வேண்டுமே வேதனை தீர்க்கும்நல் வேகமது
வேண்டாம் தடுப்பாட் டமது
கொட்டைப்பந் தன்னஒன்றைக் கொண்டிவர் ஆடுகின்ற
ReplyDeleteமட்டைப்பந் தாட்டத்தை வாழ்த்துவதா? -தெட்டம்சேர்த்
திங்கிவர் வாழ்வாங்கு வாழ இவர்ரசிகர்
தங்கள் நிலையெனிலோ தாழ்வு!
வாருங்கள் அகரன் அமுதன் அவர்களே. தங்களின் சச்சின் வெண்பா அருமை!!!!
ReplyDelete