பாரதி - குறள் வெண்பா 1
பாரதி வாழ்கையில் பாரா தயினமும்
பாரதியால் வாழ்வதைக் காண்
பாரதி - குறள் வெண்பா 2
பாரதி தன்கவியால் பாரதில் தீந்தமிழை
ஊரணியாய் தந்த கவி
பாரதி - குறள் வெண்பா 3
பாரதி வாழ்கையில் பாரா திருந்தோரும்
பாரதியால் வாழ்வதைக் காண்
பாரதி - ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
பாரதி நம்மினம் பாரதில் ஓங்கிட
வீரமும் தீரமும் பொங்கப் பொருளுக்காய்
சோரமும் போகாப் புலமையொடுப் பாடல்கள்
ஊரணியாய் தந்த கவி
Friday, September 12, 2014
Tuesday, September 10, 2013
விநாயகா
பல விகற்ப பஃறொடை வெண்பா
விநாயகா உன்பெயரால் மக்களின் வாழ்வில்
வினையை விதைப்போர் வருந்தித் திருந்த
வருடாந் திரப்பிறந்த நாளில் கலகம்
வருமுன் தடுத்தருளி வையகத்தோர் வாழ்வு
வளம்பொங்கச் செய்குவாய் அன்று
விநாயகா உன்பெயரால் மக்களின் வாழ்வில்
வினையை விதைப்போர் வருந்தித் திருந்த
வருடாந் திரப்பிறந்த நாளில் கலகம்
வருமுன் தடுத்தருளி வையகத்தோர் வாழ்வு
வளம்பொங்கச் செய்குவாய் அன்று
Wednesday, September 5, 2012
புதுக்குறளோன்
வெண்பா 1 – ஒரு விகற்பக் குறள் வெண்பா
எவரிவர் என்றேஇவ் வையம் வியக்கு
மிவர்தம் புதுக்குறள் கண்டு
வெண்பா 2 – ஒரு விகற்பக் குறள் வெண்பா
எவரிவர் என்றே வியக்குமிவ் வையம்
அவரின் புதுக்குறள் கண்டு
எவரிவர் என்றேஇவ் வையம் வியக்கு
மிவர்தம் புதுக்குறள் கண்டு
வெண்பா 2 – ஒரு விகற்பக் குறள் வெண்பா
எவரிவர் என்றே வியக்குமிவ் வையம்
அவரின் புதுக்குறள் கண்டு
ஆசிரியர்
வெண்பா 4 – ஒரு விகற்பக் குறள் வெண்பா
கடவுள் மறுப்பாளர் கூடஆ சானைக்
கடவுளாய்ப் போற்றல் வியப்பு
வெண்பா 5 – ஒரு விகற்பக் குறள் வெண்பா
கடவுள் மறுப்பாளர் கூடஆ சானைக்
கடவுளாய்ப் போற்ற லறிவு
கடவுள் மறுப்பாளர் கூடஆ சானைக்
கடவுளாய்ப் போற்றல் வியப்பு
வெண்பா 5 – ஒரு விகற்பக் குறள் வெண்பா
கடவுள் மறுப்பாளர் கூடஆ சானைக்
கடவுளாய்ப் போற்ற லறிவு
Tuesday, September 4, 2012
ஆசிரியர்
வெண்பா – 1 - ஒரு விகற்பக் குறள் வெண்பா
எத்தொழிலில் வித்தக ரானாலுங் கல்விக்கு
வித்திட்ட வித்வானைப் போற்று
வெண்பா – 2 - இரு விகற்பக் குறள் வெண்பா
உன்னையேற்றி ஊக்குவித்த உன்னதஆ சான்களைக்
கண்ணைப்போல் காத்த லழகு
வெண்பா – 3 - பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
தன்னல மற்றுன் நலத்திற்கு ழைத்திட்ட
உன்னத ஆசான்க ளையென்றும் உந்தனிருக்
கண்களினும் மேலாகப் போற்று
வெண்டுறை
ஏற்றி விட்ட ஏணியா மாசிரியர்
போற்றிப் புகழ வார்த்தை யில்லை
எதிர்பார்த் துதவிகள் செய்யும் உலகினில்
எதையும் எதிர்பாரா மல்கல்வி கற்பித்த
ஆசான்க ளென்றுமென் தெய்வமே
எத்தொழிலில் வித்தக ரானாலுங் கல்விக்கு
வித்திட்ட வித்வானைப் போற்று
வெண்பா – 2 - இரு விகற்பக் குறள் வெண்பா
உன்னையேற்றி ஊக்குவித்த உன்னதஆ சான்களைக்
கண்ணைப்போல் காத்த லழகு
வெண்பா – 3 - பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
தன்னல மற்றுன் நலத்திற்கு ழைத்திட்ட
உன்னத ஆசான்க ளையென்றும் உந்தனிருக்
கண்களினும் மேலாகப் போற்று
வெண்டுறை
ஏற்றி விட்ட ஏணியா மாசிரியர்
போற்றிப் புகழ வார்த்தை யில்லை
எதிர்பார்த் துதவிகள் செய்யும் உலகினில்
எதையும் எதிர்பாரா மல்கல்வி கற்பித்த
ஆசான்க ளென்றுமென் தெய்வமே
சர்க்கஸ்
1. சர்க்கஸ் - ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
சர்க்கஸ் கலைஞருக்கு சர்க்கஸே வாழ்க்கையாம்
சர்க்கஸைப் பார்க்கும் நமக்கெல்லாம் - வாழ்க்கையே
சர்க்கஸாகு மென்ப தறிவு
2. சர்க்கஸ் - இரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா
சர்க்கஸ் கலைஞருக்கு சர்க்கஸே வாழ்க்கையாம்
சர்க்கஸைப் பார்க்கும் நமக்கெல்லாம் - சர்க்கஸ்போல்
வாழ்க்கையா மென்ப தறிவு
சர்க்கஸ் கலைஞருக்கு சர்க்கஸே வாழ்க்கையாம்
சர்க்கஸைப் பார்க்கும் நமக்கெல்லாம் - வாழ்க்கையே
சர்க்கஸாகு மென்ப தறிவு
2. சர்க்கஸ் - இரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா
சர்க்கஸ் கலைஞருக்கு சர்க்கஸே வாழ்க்கையாம்
சர்க்கஸைப் பார்க்கும் நமக்கெல்லாம் - சர்க்கஸ்போல்
வாழ்க்கையா மென்ப தறிவு
Monday, September 3, 2012
வேகாத இட்லி
சமையலில் தேர்ந்தவர் தோழரின்ம னைவி
அமையவில்லை அன்று சமைத்திட்ட பண்டமும்
வேகவைக்கும் பண்டமான இட்லியை வேகாமல்
சாகவைத்தார் ஏனோ யவர்
அமையவில்லை அன்று சமைத்திட்ட பண்டமும்
வேகவைக்கும் பண்டமான இட்லியை வேகாமல்
சாகவைத்தார் ஏனோ யவர்
Subscribe to:
Posts (Atom)