Sunday, May 15, 2016

விளாங்காய்ச்சீர்

விளாங்காய்ச்சீர் பாவில் விளங்காச்சீ ரென்று
விளக்கிய வித்தகரைப் போற்று

Friday, January 29, 2016

T-20 வெற்றி வெண்பாக்கள்

இந்தியா டி-20 கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலியாவை வென்றதைப் பாராட்டி நானெழுதிய வெண்பாக்கள் இதோ:

1. ரோஹித் விராத்து இருவரும் வேகமாக
    ஆஸியைச் சாத்தினார் சாத்து

2. புயல்வேக பும்ராவும் ஸ்டம்பைத் தெறிக்க
    அயல்நாட்டில் வென்ற தணி

3.  புயல்வேக பும்ராவும் ஸ்டம்பைத் தெறிக்கவிட
    ஆஸியை வென்ற தணி


Tuesday, January 26, 2016

மண் பாசம்


பார்வதியம்மா, இப்பவும் ண்ணும் மோசமில்லை. பார்ட்டி நல்ல விலைக்குத் தான் உங்க நிலத்தைக் கேட்குறாரு? உங்க பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக்கக் கூடாதா?” புரோக்கர் சாமிக்கண்ணு ரொம்பத் தயங்கியபடியே கேட்டார். வானம் பொய்த்துப் போனாலும் பிடிவாதமாக போர்வெல் போட்டு மோட்டார் வைச்சாவது விவசாயம் பண்ணிக் கொண்டிருந்தார் பார்வதியம்மா. அவருக்குப் பக்கத்துல விளை நிலம் வச்சிருந்தவங்க எல்லாம் பிளாட் போட்டு ஏகபோகமாக வித்து பணத்தில் கொழித்துக் கொண்டிருந்தார்கள். ஊர்ல விவசாயம் லாபமில்லைன்னு தெரிஞ்சதும் விவசாய வேலை செஞ்சுக்கிட்டிருந்தவங்க எல்லாம் பக்கத்து டவுன்கள்ல கட்டிட வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு காலத்துல பார்வதியம்மா வீட்டுல எப்பவுமே அடுப்பு எரிஞ்சுக்கிட்டே இருக்கும். சாப்பாடுன்னு யாரு வந்து கேட்டாலும் எப்பவுமே சாப்பாடு போடுற பெரிய மனசுக்காரி. சின்ன வயசிலேருந்தே அவங்களோட வயல்ல வேலைப் பார்த்துக்கிட்டிருக்கிற அருக்காணியும் வேலப்பனும் மட்டும் தான் இன்னும் வேற ஊருக்குப் போகாம வேலை பார்த்துக்கிட்டிருக்காங்க. அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சதே பார்வதியம்மாதான். பார்வதியம்மாவோ மகனும், மகளும் கூட வெளிநாட்டுல செட்டிலாயிட்டாங்க. அவங்க எவ்வளவு தடவை கூப்பிட்டாலும் பார்வதியம்மாவுக்கு  ஊரு, வீடு, விவசாய நெலம், மரக்கொல்லை இதையெல்லாம் விட்டுட்டுப் போக மனசில்லை. ஒரு தரம் போனப்பக் கூட 1 மாசத்தில திரும்பி அறுவடைக்குக் கெளம்பி வந்துட்டாங்க.

சாமிக்கண்ணு பார்வதியம்மா கிட்ட பேசுறத அருக்காணியும் வேலப்பனும் ஒரு ஓரமா நின்னு கேட்டுக்கிட்டிருந்தாங்க. “என்ன அருக்காணி, அம்மா என்ன சொல்லப் போறாங்களோ? நம்ம பொழப்புல மண்ண அள்ளிப்போட்டுருவான் போலிருக்கே இந்த சாமிக்கண்ணுஎன்றான் வேலப்பன். “அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காதுய்யா. அம்மாவைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீ கம்முன்னு இருஎன்றாள் அருக்காணி. “புரோக்கரய்யா, நீங்க எத்தனை தடவ கேட்டாலும், என் பதில் ஒண்ணுதான். என் காலம் முடியிற வரைக்கும் இந்த நிலத்துல விவசாயம் பண்ணுவேன். என் காலத்துக்கப்புறமும் விவசாயந்தான் நடக்கும்னு நம்புறேன். தயவு செஞ்சு இனிமே என்கிட்ட இதே கேள்வியைக் கேட்டுத் தொந்திரவு பண்ணாதீங்கஎன்றார் பார்வதியம்மா. கமிஷனில் மண் விழுந்ததை நெனச்சிக்கிட்டே புரோக்கர் ஏமாத்தமா நடையக் கட்டினார். அருக்காணி பெருமிதமாநான் சொன்னேன்ல”-ங்கிற மாதிரி வேலப்பனைப் பார்த்தாள்.

ஏம்மா அருக்காணி, எனக்குக் களைப்பா இருக்கு. பம்பு செட்டு ரூமுல கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வரேன்.” என்றார் பார்வதியம்மா. அருக்காணி, “சரிங்கம்மா. நீங்க போங்க, நாங்க சாப்புட்டுட்டு அந்தக் களையப் புடுங்கிடுறோம்.” என்றாள். நிலத்துக்கு சொந்தக்காரவுங்களா இருந்தாலும் களத்தில இறங்கி வேலை செய்யத் தயங்காதவங்க பார்வதியம்மா.  தினமும் மதியம் 1 மணி நேரம் தூங்குறது பார்வதியம்மாவோட ரொம்ப நாள் பழக்கம். வேலப்பன்அருக்காணி, நாம சாப்புட்டுட்டுக் களையெல்லாம் புடுங்கிட்டோம். அம்மா இன்னுமா தூங்குறாங்க? பாவம் ரொம்பக் களைப்பு போலிருக்கு. போயி எழுப்பிட்டு வா. கூலியை வாங்கிட்டு வீட்டுக்குப் போலாம்என்றான். “சரிய்யா”-ன்னுட்டு பம்பு செட்டு ரூமுக்குப் போன அருக்காணி போட்ட ஓலத்துல வேலப்பனுக்கு விஷயம் வெளங்கிடுச்சு.

எல்லாக் காரியமும் முடிஞ்சு, பார்வதியம்மா போன சோகம் ஒரு பக்கமும் விவசாயத்தையே நம்பி நாம மோசம் போயிட்டோமுன்னு இன்னொரு பக்கமும் அருக்காணியும் வேலப்பனும் சொல்ல முடியாம அழுதுகிட்டேயிருந்தாங்க. இதுதான் சமயமுன்னு புரோக்கர் சாமிக்கண்ணு பார்வதியம்மா மகனும் மகளும் ஊருக்குக் கிளம்பறன்னிக்கு மொத நாளு நைசா நிலத்தை விக்கற பேச்சை எடுத்தாரு. பார்வதியம்மா மகன் பாலுபுரோக்கரய்யா, எங்கம்மாவோட ஆசை, கனவு எல்லாமே விவசாயந்தான். நாங்கதான் அதையெல்லாம் விட்டுட்டு வெளிநாடு போயிட்டோம். அவங்க இல்லேன்னாலும் விவசாயம் இருக்கணும்னுட்டு நிலத்தையெல்லாம் அருக்காணிக்கும் சாமிக்கண்ணுக்கும் எழுதி வைக்கச் சொல்லி ஒரு மாசத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டாங்க. அவங்க ஆசைப்பட்ட மாதிரி பத்திரத்தை மாத்தி எழுதியாச்சு. அருக்காணி, சாமிக்கண்ணு எங்க அம்மா இல்லாட்டியும் விவசாயம் இருக்கணும். அது ஒங்க கையிலதான் இருக்கு. என்ன உதவின்னாலும் எங்க கிட்ட தயங்காம கேளுங்க. இந்தாங்க பத்திரம்என்றான். ஏனோ அருக்காணிக்கு போட்டோவிலிருக்கும் பார்வதியம்மா தன்னைப் பார்த்து நிம்மதியாக சிரித்துக் கொண்டிருப்பது மாதிரி தோன்றியது.